திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (17:31 IST)

ஒருநாள் திடீரென தள்ளிப்போனது 'மெர்சல்'

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல தாண்டி வரும் தீபாவளி தினத்தில் ரீலீஸ் ஆகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இன்னும் ஒருசில நிமிடங்களில் சென்சார்  சான்றிதழும் கிடைத்துவிடும் நிலை உள்ளது



 
 
இந்த நிலையில் 'மெர்சல்' தமிழ் போலவே இந்த படம் தெலுங்கிலும் அதே தீபாவளி திருநாளில் வெளியிட அனனத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒருசில காரணங்களால் தெலுங்கு திரைப்படமான 'அதிரிந்தி' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
 
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் மெர்சல் ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் புதிய சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.