இதுதான் தளபதி 65 கெட் அப்பா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக தளபதி 65 இருக்கிறது. இந்த படத்துக்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் நெல்சன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் கார் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கலைந்த முடியுடன் தாடி வைத்துக்கொண்டு விஜய் இருக்கும் நிலையில் இதுதான் அடுத்த படத்தின் கெட்டப்பா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.