வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (19:03 IST)

விஜய் பட நடிகைக்காக கல்லீரல் தானம் செய்யும் ரசிகர்!

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினுக்கு அம்மாவாக நடித்த நடிகை லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய ரசிகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் லலிதா. இவர் இயக்குநர் பரதனின் மனைவி ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் விஜய்- ஷாலினியுடன் காதலுக்கு மரியாதை, உள்ளம்கேட்குமே, கிரீடம், மாமனிதன், உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடிஉத்துள்ளார்.

சமீபத்தில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வாஇ சிகிச்சை பெற்று வரும் நடிகை லலிதாவுக்கு அவரது ரசிகரும் கேரள நாடக சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர்  கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.