வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (21:09 IST)

விஜய்க்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் 10 நாள்தான் வித்தியாசம்

மிக குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் கால்பதித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. 'நடிகையர் திலகம்' மற்றும் 'நோட்டா' ஆகிய இரண்டே படங்களில் தமிழ் திரையுலகில் அழுத்தமாக காலூன்றிவிட்டார் விஜய்தேவரகொண்டா

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த அடுத்த படமான 'டாக்ஸிவாலா' என்ற திரைப்படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தே நாட்களுக்கு முன்னர்தான் தளபதி விஜய்யின் 'சர்கார்'  திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்தேவரகொண்டாவின் 'டாக்ஸிவாலா' திரைப்படம் தமிழில் டப் செய்யப்படவில்லை என்றாலும் நேரடியாக தெலுங்கு மொழியில் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா, பிரியங்கா ஜவால்கர் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இளம் இயக்குனர் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.