புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (21:32 IST)

மரண வெயிட்டிங்: மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி மூலம் தமிழிலும் பிரபலாமன நடிகர் விஜய் தேவரகொண்டா நோட்டா என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 
 
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன், சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா பின்வருமாறு பேசினார். முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது புரியாமல் தவித்தேன். ஆனால் இப்போது நல்ல தமிழில் நானே பேசுவேன். 
 
இந்தப்படம் குறித்து டிவிட்டரில் என்ன பதிவிட்டாலும், அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் வரும். அதேபோல நானும் இந்த படத்திற்காக மரண வெயிட்டிங். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை என தெரிவித்துள்ளார்.