புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (14:56 IST)

மாறி மாறி புகழ்ந்து கொண்ட அர்ஜுன் ரெட்டி & ஆதித்யா வர்மா !

அர்ஜுன் ரெட்டி படப்புகழ் விஜய் தேவாரகொண்டா நடிகர் துருவ் விக்ரம்மை பாராட்டியுள்ளார்.

தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம்  ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரிலும், தமிழில ஆதித்யா வர்மா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் வெற்றி படமாக அமைந்தாலும் தமிழில் த்ருவ்வுக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கித் தந்தாலும் வெற்றிப்படமாக அமையவில்லை.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவாரகொண்டா  புத்தாண்டை முன்னிட்டு துருவ் விக்ரம்மைப் பாராட்டி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த துருவ் ‘அர்ஜுன் ரெட்டி போன்ற ஒரு சிறந்த படத்தின் மீதான காதல்தான் ஆதித்யா வர்மாவை எடுக்க எங்களைத் தூண்டியது. ஒரு நாள் உங்களைப் போன்ற வெற்றியாளராக நானும் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்றென்றும் நான் உங்களால் ஈர்க்கப்பட்டவன்’ எனத் தெரிவித்துள்ளார்.