ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:59 IST)

28 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கியுள்ளனர்.

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருக்கும் விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த நாளைய  தீர்ப்பு திரைப்படம் டிசம்பர் 4 1992 ஆம் ஆண்டுதான் ரிலீஸானது. ஆரம்பத்தில் தொடர் தோல்வி படங்களாக கொடுத்தாலும், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை தக்க வைத்த விஜய், திருமலை படத்துக்கு பின்னர் தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிக்கொண்டார்.

கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, சர்கார், பிகில் என அவரின் படங்கள் எல்லாம் வசூல் மழை பொழிந்து இப்போது தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். நடனம், நகைச்சுவை, ஆச்ஷன் என கலந்துகட்டி மசாலா படங்களைக் கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது ரசிகர்களாக்கியுள்ள விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள விஜய்க்கு 28 years of vijay என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள ரசிகர்கள் சமுகவலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.