மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி
மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி.
கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘மூடர் கூடம்’. நவீன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இவர், சிம்புதேவன் மற்றும் பாண்டிராஜிடம் பணியாற்றியவர். பிளாக் காமெடியான ‘மூடர் கூடம்’, எல்லோராலும் ரசிக்கப்பட்டது. அதுவும் இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் தனித்த கவனத்தைப் பெற்றன.
இந்நிலையில், 5 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார் நவீன். விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். வருகிற ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.