திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (11:46 IST)

வழக்கம்போல பஞ்சாயத்தை தொடங்கிய தல - தளபதி ரசிகர்கள் – ட்ரெண்டாகும் #தன்னிகரற்ற_தலஅஜித்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று அவர் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் போட்டியாக அஜித் குறித்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் முதல், இரண்டாம் போஸ்டர்கள் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BeastSecondLook, #HBDTHALAPATHYVijay உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

வழக்கமாக விஜய் பிறந்தநாளில் அஜித் ரசிகர்களும், அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்களும் தங்கள் ஹீரோக்களின் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து மோதுவது நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று விஜய் குறித்த ஹேஷ்டேகுகளுடன் அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் போட்டி போட தொடங்கியுள்ளது. #தன்னிகரற்ற_தலஅஜித் என்ற ஹேஷ்டேகை அஜித் ரசிகர்கள் வேகமாக ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் வழக்கம்போல ட்விட்டரில் தல – தளபதி ஹேஷ்டேக் யுத்தம் தொடங்கியுள்ளது.