வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (15:45 IST)

மனநலப் பிரச்சனையை மையப்படுத்தியதா விஜய்யின் அடுத்த படம்!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் படத்தில் விஜய் ஒரு மனநலம் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. எரோட்டோமேனியா எனும் மன நலப்பிரச்சனை கொண்டவராக விஜய் இந்த படத்தில் நடிக்கிறாராம். எரோட்டோ மேனியா என்றால் ஒருவர் தம் மீது தீவிரமான அன்பு செலுத்துவதாக அதீதமாக நம்புவதாம்.