விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயனின் க்யூட் புகைப்படம்!
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் க்யூட் புகைப்படம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த க்யூட் ரொமான்ஸ் புகைப்படத்தை இரசிகர்கள் ரசித்து ரொமான்ஸ் கமெண்ட்ஸ்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா இரண்டு மலையாள படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது