செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (22:46 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நயன்தாரா - விக்னேஷ்சிவன் சந்திப்பு: திருமணத்திற்கு அழைப்பா?

nayan vignesh cm stalin
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நயன்தாரா - விக்னேஷ்சிவன் சந்திப்பு: திருமணத்திற்கு அழைப்பா?
தமிழக முதல்வரை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் இன்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரம் அருகே நடைபெற உள்ளது
 
இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்கள். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது