பாட்டில் கேப் சேலஞ்ச் செய்ய முட்டி மோதிய விக்னேஷ் சிவன்; கடுப்பான நெட்டிசன்கள்
ஆரம்பத்தில் ஹாலிவுட் அதிரடி ஆக்ஷன் நடிகர் ஜேசன் செய்த பாட்டில் கேப் சேலஞ்ச் கேம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதை அடுத்து ஹாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அர்ஜுன் போன்றோர் இந்த சேலஞ்சை செய்து காட்டி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு சமீபத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தவகையில் தற்போது பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட்டில் கேப் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரால் காலை தூக்கி பாட்டிலின் மூடியை திறக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் காலைக் கூட தூக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்து பிறகு கையாலேயே திறந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதில் “உனக்கெல்லாம் நயன்தாராவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். காலை நல்லா தூக்குங்க புரோ.. என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.