வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (10:59 IST)

அடடே தடம் பட ஹீரோயினா இது… வித்தியாசமான லுக்கில் வெளியிட்ட புகைப்படம்!

நடிகை வித்யா பிரதீப் சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்திவந்த நிலையில் தடம் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தனுஷின் மாரி-2, தடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் எக்கோ என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நாயகி தொடர் மூலமாக பிரபலமான இவர் சினிமா, சீரியல் என இரண்டு திரைகளிலும் கவனம் செலுத்திவந்தார். ஆனால் இப்போது அதிரடி முடிவாக இனிமேல் சீரியல்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சினிமாக்களுக்காக விதவிதமான போட்டோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நரைமுடியுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.