ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (10:02 IST)

நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகும் விதார்த்தின் ‘அஞ்சாமை’ திரைப்படம்!

மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்த மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு விதமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நீட் தேர்வுக்கு இன்னமும் எதிர்ப்புகள் உள்ளது. குறிப்பாக அதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வை முன்வைத்து அஞ்சாமை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை திருச்சித்திரம் நிறுவனம் தயாரிக்க, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை எஸ் பி சுப்பராமன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. போஸ்டரில் “உயிர்ப்பலி வாங்கிய நீட்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால் நீட் தேர்வுக்கு எதிரான படமாக இருக்கும் என தெரிகிறது.