1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (16:24 IST)

நடிகை கடத்தலில் திலீப்க்கு தொடர்பு? வெளியான புகைப்படங்கள்

கேரள நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் நடிகர் திலீப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

 
கேரள நடிகை கடத்தப்பட்ட விவகாரம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய சினிமா துறைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகையை கடத்தியவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப் சம்பந்தப்பட்டுள்ளார் என செய்திகள் பரவியது. அதற்கு நடிகர் திலீப் மறுப்பு தெரிவித்தார். 
 
அதைத்தொடர்ந்து பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திலீப் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக திலீப்பிடம் காவல்துறையினர் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். 
 
இந்நிலையில் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் நடிகர் திலீப் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் திலீப் மற்றும் டைரக்டர் நாதிர் ஷா ஆகியோர் பல்சர் சுனில் தங்களை மிரட்டியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
 
திலீப்பின் மேனஜரிடம் சுனில் பாணம் கேட்டும் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ கேரள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.