1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:31 IST)

’வேட்டையன்’ படத்தின் மனசிலாயோ பாடல் ரிலீஸ்.. ரஜினி ரசிகர்கள் குஷி..!

Vettaiyan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தின் மனசிலாயோ  என்ற பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மனசிலாயோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலுக்கு சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதி உள்ளனர். அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசியா வாசுதேவன் குரலை ரசிகர்கள் கேட்க முடிந்தது ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் ல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran