செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (11:08 IST)

கத ஒன்னும் இல்ல சார்… ஏதாவது நாவல் பக்கம் போவோம் – கமல்கிட்ட சொன்ன வெற்றிமாறன்!

நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தனது சினிமா களத்துக்கு உற்சாகமாக வர ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் சென்னையில் கமல் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கான சந்திப்பு சினிமா வட்டாரத்தில் பெரிய சந்தேகங்களுக்கு இட்டு சென்றுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த சந்திப்பின் போது கமல்ஹாசன் வெற்றிமாறனிடம் ’ஏதாவது கதை இருக்கிறதா? நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறன் ‘இப்போது கதை எதுவும் என்னிடம் இல்லை சார். வேண்டுமென்றால் ஏதாவது ஒரு நாவலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கட்டுமா?’ எனக் கேட்டுள்ளாராம்.

இது சம்மந்தமாக இருவரும் சில நாவல்களை பற்றியும் ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.