வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (11:05 IST)

பழம்பெரும் நடிகை ஆர்.சுப்பலட்சுமி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

பழம்பெரும் நடிகை ஆர்.சுப்பலட்சுமி  நேற்று இரவு அவரது சொந்த ஊரான கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 87.

மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி  1936 ஆம் ஆண்டு பிறந்தார்.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நிலையில் ஒரு சில தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரே ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ’ஒரு பொண்ணு ஒரு பையன்’ என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அதன் பிறகு ’ராமன் தேடிய சீதை’ என்ற படத்தில், ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் த்ரிஷாவின் பாட்டியாகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’அம்மணி’ என்ற திரைப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்த இவர் என்பதும் மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான ’ஹவுஸ் ஓனர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் மாலில் மாட்டிக்கொள்ளும் நபர்களில் ஒருவராக ஆர்.சுப்பலட்சுமி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஆர்.சுப்பலட்சுமி காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran