வந்தான்..சுட்டான்.. ரிப்பீட்டு.. மாநாடு 2..! – வெங்கட் பிரபு தகவல்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணம் உள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்டை மையப்படுத்தி உருவான இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நாள் முதலாக பரவலான வரவேற்பை பெற்றதுடன், அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பெற்று ஹிட் அடித்துள்ளது. முக்கியமாக இதில் எஸ்.ஜே.சூர்யாவின் தனுஷ்கோடி கதாபாத்திரம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த உரையாடல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணம் உள்ளதாகவும் தற்போது கமிட் ஆகியுள்ள பணிகளை முடித்த பிறகு அதை தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் பாகத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக வருவார் என அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.