1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (20:43 IST)

மங்காத்தா 2வும் இல்ல பில்லா 3ம் இல்ல?: சிம்புவுடன் இணையும் வெங்கட்பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்து விட்டார். இதையடுத்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படம் மங்காத்தா 2 அல்லது பில்லா 3 படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது
 
இந்நிலையில், வெங்கட் பிரபு தனது டுவிட்டர்  பக்கத்தில்  பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நான் இயக்கும் அடுத்து படத்தில் என்னுடைய நண்பர் சிம்பு நடிக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இது புதுக் கதை. எந்த படத்தின் இரண்டாம் பாகமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த படம் 2019-ல் வெளியாகவுள்ளதாகவும், படத்தில் பணிபுரிய உள்ள நடிகர்கள், கலைஞர்கள், படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.