வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (16:34 IST)

'கூச முனிசாமி வீரப்பன்' - தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் டிரெய்லர்!

ZEE5  மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்  ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  


ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது.

நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்கு மூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. 

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார்.

வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை  காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.  வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும்  ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

இது குறித்து ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், "இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்படாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை  வழங்கும் 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸை,  பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிக்கல்கள் மிகுந்த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த  சீரிஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில்  அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத்தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின்  கடந்த காலத்தின் குற்றவியல் உலகின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வையாளர்களை இந்த சீரிஸ் கவர்ந்திழுக்கும்."

நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான  நேர்காணலைப் பெறுவதற்கு,  நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். 
முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது.

வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்.

தயாரிப்பாளர் பிரபாவதி கூறுகையில், “உலகத் தரத்தில் உள்ளூர் கதைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் 'தீரன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தை நிறுவியுள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பான 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரு உயர்தரமான ஆவணத் தொடராக, இந்தியாவில் 'டாக்கு-சீரிஸ்' வகைக்கான எடுத்துக்காட்டாக இருப்பதோடு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருமென நாங்கள் நம்புகிறோம்.

கூச முனிசாமி வீரப்பன் டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது.