பிரபுதேவா நடிக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு!
பிரபுதேவா நடிப்பில் அடுத்த ரிலீஸாக வரும் திரைப்படம் மை டியர் பூதம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸாகிறது.
பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஇந்த படத்தில் இடம்பெற்ற எனக்கு மட்டும் ஏன் ஏன் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை தற்போது ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபுதேவா மற்றும அஷ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கியுள்ளார். ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் மாயாஜால படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் சர்ப்ரைஸாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு நடித்துள்ளார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இறையன்பு நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.