1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:09 IST)

முத்திர குத்திருவாங்க… ரூட்டை மாற்றிய ராக்கி ஹீரோ!

தரமணி மற்றும் ராக்கி படங்களின் மூலமாக கவனத்தை ஈர்த்த நடிகர் வசந்த் ரவி அடுத்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

தரமணி படத்தின் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, அதற்கடுத்து சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு ராக்கி படத்தில் நடித்தார். அந்த படத்தின் தாமதத்தால் அவரின் அடுத்தடுத்த படங்களும் தாமதமாகின. இப்போது ராக்கி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் தரமணி, ராக்கி என இரண்டு டார்க் படங்களில் நடித்துவிட்ட நிலையில் அடுத்த படம் நகைச்சுவைக் களத்தில் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

அந்த படத்தை கண்டநாள் முதல் மற்றும் கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய பிரியா இயக்குகிறாராம்.