என் ட்விட்டர், இன்ஸ்டாகிராமை ஹேக் பண்ணிட்டாங்க! – வரலட்சுமி அறிக்கை
பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட் மட்டுமல்லாமல் அடிக்கடி சமூக பிரச்சினைகள் குறித்த தனது கருத்தையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை யாரோ ஹேக் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “என்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் கணக்குகள் நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் புகார் அளித்துள்ளேன். எனவே இன்னும் சில தினங்களுக்கு என்னுடைய சமூக வலைதள கணக்குகளில் வரும் பதிவுகள், செய்திகளுக்கு பதிலளிக்கவோ, கண்டுகொள்ளவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நிலைமை சரியான பிறகு மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிடுவேன். ரசிகர்கள்களும், பாலோவர்களும் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி” என கூறியுள்ளார்.