வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (12:22 IST)

பொசஸிவ்வா இருக்கிறாளா...? செருப்பால அடிப்பேன் - வனிதா ஆவேசம்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார்.  ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன்  தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்  சனம் ஷெட்டி. 
 
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடன், நீங்கள் பிக்பாஸில் இருக்கும் போதே ஷெரின்  தர்ஷனுடன் (affair)ல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறீர். இப்போது அதுவே நடந்துள்ளது. இதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர் என கேட்டதற்கு, " சனம் ரொம்ப நல்ல பொண்ணு ..என்கிட்ட நிறைய  ஷேர் பண்ணியிருக்கா, சனம் மீது  எனக்கு மிகுந்த மரியாதையை உள்ளது. காரணம் , தர்ஷனை நம்பி அவனுக்காக, அவனது வளர்ச்சிக்காக படம் எடுத்திருக்கிறார்.  பிக்பாஸ் வீட்டில் நான் ஷெரினிடம் சொல்லியிருந்தேன். அவனுக்கு வெளியில் வேறு ஒரு பெண் இருக்கிறார். நீ விட்டு விடு என்று.... எனக்கு தர்ஷன் மீது க்ரஷ் தான் என கூறினால். 
 
தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என தர்ஷன் கூறினான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும். யார் மீது  தப்புன்னு சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லை.  எங்கபோனாலும் கூடவே கூப்பிட்டு போன்னு சொல்லி ப்ரஸ்ஸர் கொடுத்தாளா..?  இப்படியெல்லாம் என்கிட்ட தர்ஷன் சொன்னானா நான் செருப்பு எடுத்து அடிச்சுடுவேன். சில்லி ரீசன் சொல்லிட்டு இருக்குறான். சனம் இது எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கிறாள். அவள் ரொம்ப தைரியனமான பெண்.  ஒரு பெண்ணா அவளை நான் மதிக்குறேன் என கூறினார் வனிதா.