திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:29 IST)

பழம்பெரும் பாடகிக்கு பாட வாய்ப்பு கொடுத்த டி.இமான்!

Imman
தேசிய விருது பெற்ற பழம்பெரும் பாடகி ஒருவரை இசையமைப்பாளர் இமான் இசையமைக்க வாய்ப்பு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இசையமைப்பாளர் இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் அந்த வகையில் அவர் தற்போது மலை என்ற திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த  படத்தை முருகேசன் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் அவர்கள் பாட வைத்துள்ளார் 
 
தேசிய விருது பெற்ற வாணி ஜெயராம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் சுமார் 20 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ள நிலையில் அவரை மீண்டும் ரீஎன்ட்ரி செய்ய வைத்ததற்கு இசை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்