கமலோடு மோதும் அஜித் – தள்ளிப்போன வலிமை ரிலிஸ் !
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்தப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு தீபாவளிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்துக்குப் பிறகு அதேக் கூட்டணியில் ’வலிமை’ (தற்காலிக பெயர் ) படத்தை உருவாக்க உள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . இந்தப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தாமதவாதாலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் படம் எதிர்பார்த்த படி கோடை விடுமுறைக்கு வெளிவர முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வலிமை திரைப்படம் இப்போது தீபாவளிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கமலின் இந்தியன் 2 திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கமலின் தூங்காவனமும் அஜித்தின் வேதாளமும் 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு மோதின. அதில் வேதாளம் மிகபெரிய வெற்றி பெற்றது.