போட்றா வெடிய: தல 60 படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து நடிக்கும் "தல60" படத்தின் டைட்டில் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் ”என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய், ”தல 60” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.
இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாகேவே இப்படத்தின் டைட்டில் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்காக அஜித்தின் செண்டிமெண்ட் லெட்டரான "வி" ல் 100-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அதிலிருந்து "வலிமை" என்ற வார்த்தையை டைட்டிலை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த தகவலை சற்றுமுன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.