அஜித்தால் காலதாமதமாகும் ‘வலிமை’? அதிருப்தியில் ஹெச்.வினோத்
அஜித்தால் காலதாமதமாகும் ‘வலிமை’?
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘வலிமை’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு இடையிடையே தாமதமாவதற்கு அஜித் தான் காரணம் என்று ஹெச்.வினோத் தரப்பில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்காக தானியங்கி விமானம் தயாரிக்கும் பணியில் அஜித் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புரோஜக்டில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் இதனால் இடையிடையே படப்பிடிப்புக்கு வராமல் அவர் அந்தப் புரோஜக்ட் பணிக்காக சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தன்னால் தொடர்ச்சியாக அதிக நாட்கள் கால்ஷீட் தரமுடியாது என்றும் தான் ஓய்வாக இருக்கும்போது சொல்லி அனுப்புவதாகவும் அப்பொழுது மட்டும் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள் என்று அஜித் தரப்பில் இருந்து இயக்குனருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனால் இயக்குனர் ஹெச்.வினோத் தான் திட்டமிட்டபடி படத்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்ச் மாதத்திலிருந்து அஜித் முழுநேரமாக ‘வலிமை’படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது