வலிமை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும்! வதந்திகளை நம்பாதீர்! – படக்குழு உறுதி!
அஜித் நடித்த வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக வெளியான வதந்தி குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி வருகிறது.
வலிமை பொங்கலுக்கு வெளியாவதாக போனிகபூர் அறிவித்திருந்தார். தற்போது ஒமிக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக வலிமை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக பேச்சு எழுந்தது. அதை மறுத்துள்ள வலிமை படக்குழு படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாக தெரிவித்துள்ளது