சினிமா தான் 6 முதலமைச்சர்களை தந்துள்ளது: வைரமுத்து பேச்சு
தமிழகத்தில் சினிமாதான் 6 முதலமைச்சர்களை தந்துள்ளது என கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், தயாரிப்பாளர் தாணு, முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சினிமா ஒரு விசித்திரமான தொழில்நுட்பம் என்றும் தமிழ்நாட்டில் 6 முதலமைச்சர்களை சினிமாதான் உருவாக்கி தந்துள்ளது என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது