வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:32 IST)

முடிவுக்கு வராத வைரமுத்து விவகாரம் :இன்னொரு பெண் புகார்...?

மீடூ விவகாரம் எப்போது இந்திய இணையதளங்களில் காலெடுத்து வைத்ததோ அப்போதிலிருந்தே தவறிழைத்த பல  பிரபலங்களின் மானம் கப்பலேறிக்கொண்டே வருகிறது.
வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதும் அவ்விவகாரம் தமிழ் சினிமாத்துறையில் பூகம்பமானதும் அனைவரும் அறிந்ததே.
 
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக பாடகி புவனா ஷேஷன் என்பவரும் வைரமுத்து தன்னை தவறாக எண்ணத்தில் அழைத்ததாக கூறி வைரமுத்து மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.
 
இது குறித்து ஷேஷன் கூறுகையில் நான் பாதிக்கப்பட்ட விஷயத்தை வெளியில் சொல்ல  என் மகன் தான் எனக்கு  முதலில் தைரியம் தந்தான். அதன் பிறகுதான் இதை வெளியே சொல்ல எனக்கு துணிவு வந்தது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.