செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:41 IST)

அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம்: ரஜினி குறித்து வைரமுத்து கவிதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று காமன் டிபி போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்ததை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஜினி குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நகலெடுக்க முடியாத 
உடல்மொழி
 
சூரியச் சுறுசுறுப்பு
 
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
 
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
 
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
 
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு
 
ரஜினிகாந்த் குறித்து வைரமுத்து பதிவு செய்துள்ள இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ரஜினி ரசிகர்கள் வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குடன் நன்றி தெரிவித்து ஒரு டுவிட்டை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது