1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (12:06 IST)

விரும்பும்வரை வாழ்க! கவிதை வடிவில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து ’விரும்பும் வரை வாழ்க’ என்று கவிதை வடிவில் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து கவிதையில் கூறு இருப்பதாவது:
 
 
தங்களுக்குத் தேவையான
ஏதோ ஒரு மின்னூட்டம்
உங்களிடம் உள்ளதாக
மக்கள் நம்புகிறார்கள்
 
அதை
மிக்க விலைகொடுத்துத்
தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
 
கலை என்ற பிம்பத்தைவிட
உங்கள்
நிஜவாழ்க்கையின் நேர்மைதான்
என்னை வசீகரிக்கிறது
 
எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள்
பலம் பலவீனம்
பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்
அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவேன்
 
உடல் மனம் வயது கருதி
நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும்
வாழ்க்கையெல்லாம்
வழிவகுக்கும்
 
வாழ்த்துகிறேன்
 
விரும்பும்வரை வாழ்க!
 
Edited by Mahendran