வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:46 IST)

உருவாகிறது வைரமுத்து பயோபிக்…. நடிக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்துவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அதிக முறை தேசிய விருது பெற்ற கலைஞராக இருப்பவர் வைரமுத்து. 1981 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பிஸியாக பாடல்களை எழுதிக் கொண்டு இருப்பவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மி டூ சர்ச்சையில் சிக்கினார். அதையடுத்து இப்போது ஒரு சிறிய தேக்க நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக முன்னணி இயக்குனர் ஒருவர் திரைக்கதை எழுதி வருகிறாராம். இந்நிலையில் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளாராம்.