ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (19:17 IST)

தனுஷுக்கு ஈக்குவலாக நடனமாடும் வடிவேலு; வைரல் வீடியோ

”சில் ப்ரோ” பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பட்டாஸ். இதில் சில் ப்ரோ என்ற பாடல் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இப்பாடலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடனமாடுவது போல் எடிட் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு இது போல் மீம் கிரியேட்டர்களுக்கு கடவுளாக திகழ்கிறார். வடிவேலு இல்லாத எந்த மீம் வீடியோவும் இல்லை. அதை போல் சில் ப்ரோ பாடலில் வடிவேலு ஆடியிருந்தால் எப்படி இருக்கும் என கச்சிதமாக பொருந்துகிறது இந்த வீடியோ. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.