1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:09 IST)

வட சென்னை ஒரு வார வசூலே இத்தனை கோடியா? மை காட்...!

தனுஷ்,  வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், பொல்லாதவன் போன்ற மெகா ஹிட் வெற்றி படங்களை தொடர்ந்து 3-வது முறையாக வடசென்னை படத்தில் இணைந்தனர்.  3 பாகங்களாக வரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, இயக்குனர்கள் அமீர், சமுத்திரகனி, நடிகர்கள் கிஷோர், ராதாரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 
 
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் இருக்க, பிறகு என்ன வசூல் மழை தான், இப்படம் ஏ சான்றிதழ் பெற்று மிக பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்திருந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்நிலையில் வட சென்னை உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 45 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
 
எப்படியும் தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் வராததால், ரூ 70 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.