வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2023 (12:34 IST)

கைதானதாக போலி வீடியோ வெளியிட்ட நடிகை.. உண்மையில் கைதாகும் நிலையால் பரபரப்பு..!

urfi javed
பிரபல நடிகை ஒருவர் தான் கைதானதாக போலியான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்து உள்ளதால் உண்மையிலேயே கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் நடிகை உர்பி ஜாவேத். இவர் ஆபாச உடை அணிந்து ரோட்டில் நடந்து சென்றதாகவும் அப்போது போலீசார் அவரை கைது செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டார் 
 
இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விளம்பரத்திற்காக போலி கைது வீடியோவை அவர் பதிவு செய்தது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva