திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (22:24 IST)

''சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் போகும் உதயநிதியின் படம்''- இயக்குனர் தகவல்

Shooting
உதயநிதி நடிப்பில் வெளியான ''கண்ணே கலைமானே'' படம் சர்வதேச திரைப்பட  விழாக்களுக்கு மீண்டும் போகிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் உதயநிதி , தமன்னா, வடிவுக்கரசி, விடிவி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம்  கண்ணே கலைமானே. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார்.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி  3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’2019ம் ஆண்டில் வெளியான #கண்ணேகலைமானே  திரைப்படத்தை (festival version) திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில் 1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக  யதார்த்தமாக அதன் அனைத்து நிலையிலும் அந்நாளில் உருவாக்கி இருந்தேன்.

கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றதோடு கொரோனா வந்தது, தாமதமானாலும்  காலஇடைவெளியை பற்றிக் கவவைப்படாத சர்வதேச திரைப்பட  விழாக்களுக்கு மீண்டும் போகிறது மக்கள் அன்பன்  உதயநிதி, தமன்னா நடித்த #கண்ணேகலைமானே’’ என்று தெரிவித்துள்ளார்.