1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:44 IST)

தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!

தமிழ் நடிகருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா!
முதல் முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்பதும் இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், திரிஷா, மீரா ஜாஸ்மின், பாடகி சித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நடிகர் பார்த்திபனுக்கு நேற்று ஐக்கிய அரபு நாட்டின் தூதரகமும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகர் பார்த்திபன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது