த்ரிஷாவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்காம்…
விக்ரம் நடிக்கும் படத்தில், த்ரிஷா – கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கிறதாம்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் படம் ‘சாமி 2’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. எனவே, முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவையும், தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் கீர்த்தி சுரேஷையும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
என்னதான் த்ரிஷா 10 வருடங்களுக்கும் மேலாக ஃபீல்டில் இருந்தாலும், தற்போது அவருடைய மார்க்கெட் டல் தான். எனவே, அவருடைய போர்ஷன் குறைவாகவும், கீர்த்தி சுரேஷ் போர்ஷன் அதிகமாகவும் இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர். இருவருக்குமே சமமான முக்கியத்துவம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.