வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (10:46 IST)

தேன் படத்தின் தயாரிப்பாளர் கேட்ட தொகை… கைகழுவிய முன்னணி விநியோக நிறுவனம்!

தேன் என்ற திரைப்படத்தை அதன் உருவாக்கத்துக்காக வாங்கி வெளியிட இருந்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாம்.

இந்தியன் பனோரமாவுக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து அசுரன் மற்றும் தேன் ஆகிய இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அசுரன் படத்தைப் பற்றி எல்லா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த தேன் என்ற படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் தரத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்னரே தைரியமாக பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான நம்பிக்கையால் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.

ஆனால் படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தேன் படத்தின் தயாரிப்பாளர் விநியோகஸ்தரிடம் ஏற்கனவே பேசிய தொகையை விட அதிகமான தொகைக் கேட்டுள்ளாராம். அதனால் அந்த படத்தின் விநியோகம் செய்யும் முடிவில் இருந்து டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பின் வாங்கியுள்ளதாம்.