செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (12:53 IST)

லாரன்ஸின் காஞ்சனா படத்தில் நடித்து வாழ்க்கை நாசமா போச்சு - திருநங்கை கண்ணீர் பேட்டி!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார்நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். பயம் கலந்த நகைச்சுவை படமாக வெளிவந்த காஞ்சனா மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
 
இப்படத்தில் காஞ்சனா பேயாக சரத்குமார் நடித்திருந்தார். அவரது மகளாக திருநங்கை பிரியா நடித்திருந்தார். அவரது ரோல் படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சியாக அமைந்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா நான் காஞ்சனா படத்தில் நடித்தது தான் மிகப்பெரிய தவறு என கண்ணீர் பேட்டி கொடுத்துள்ளார். 
 
ஆம், 'காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. காஞ்சனா படத்திற்கு முன் நான் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். இப்படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். ஆனால், அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. வேறு வேலை கூட எதுவும் பார்க்க முடியவில்லை' என வருத்தத்தோடு பேசினார் பிரியா .