1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (18:16 IST)

காயத்ரியுடன் கூட்டு சேர்ந்து மறுபடியும் ஆட்டம் போடும் ஜூலி - வீடியோ!

நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் உள்ள சொந்தங்களுக்காக பொய் சொல்லியதாக கூறி ஜூலி மன்னிப்பு தெரிவித்தார். இத்தனை நாட்கள் ஜூலியை அழ வைத்த காயத்ரி, தனித்து விடப்பட்ட நிலையில் தற்போது ஜூலியை கூட்டு சேர்த்துள்ளார்.

 
பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். காயத்ரி ரகுராமிற்கு ஆதரவாக இருந்த நமீதா இல்லாத நிலையில், ஜூலியுடன் கைக்கோர்த்து கொண்டு தொடர்கிறது காயத்ரியின் ஆட்டம். 
 
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி பற்றிய ப்ரொமோ வீடியோவில் ஓவியா, ஜூலியை பார்த்து உனக்கே உன் மீது வெறுப்பு  வரவில்லையா, சத்தியமாக சொல்லு என்று ஓவியா கேட்க ஜூலியோ லூசு மாதிரி பாடிக்கொண்டே இருக்கிறார். காயத்ரி  ரகுராமோ இது அவராக தேடிக் கொண்ட சாபம் என்று சொல்லிவிட்டு இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.
 
ஆர்த்தி, நமீதா இருந்தவரை அவர்களுடன் சேர்ந்துகோண்டு ஜூலியை வெறுப்பேற்றிய காயத்ரி, அவர்கள் சென்றதும் ஆதரவுக்கு ஆள் இல்லாமல் போன ஜூலியை தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். ஜூலியின் உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொண்ட  பார்வையாளர்கள் அவரை வெறுப்பதோடு, வெளியேற்றுமாறும் கூறி வருகிறார்கள்.