இன்று ரிலீஸாகும் தமிழ்ப் படங்கள் & வெப் தொடர்… ஒரு பார்வை
இன்று தமிழில் இரண்டு படங்களும் ஒரு வெப் தொடரும் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸாகின்றன.
நயன்தாராவின் O2
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக இன்றும் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களமாக உருவாகும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கதைக்களம்
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் இருப்பவர்கள் பறிக்க நினைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வீட்ல விசேஷம்
வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்துக்கு படக்குழுவினர் செய்த வித்தியாசமான ப்ரமோஷன்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சுழல்
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகி உள்ளது. இந்த தொடரை விக்ரம் வேதா புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது.