வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (13:34 IST)

ஹேப்பி பர்த்டே சந்தானம்..!

இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு நகைச்சுவை செய்து மக்களை மகிழ்விக்கும் காமெடி நடிகர்களில் ஒருவரான சந்தானம் இன்று தனது 39  வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.


 
மன்மதன் படத்தில் நடிகர் சிம்புவால் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் 'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் ஹீரோக்களுக்கு இணையான ஒரு நிலையை எட்டி பிடித்தார். பிறகு பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற மாபெரும் மெகாஹிட் படங்களைத் வெற்றியடைய செய்ததில் சந்தானத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 


தனக்கு கைவந்த கலையான நகைச்சுவையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த சந்தானம் தெரிந்தோ தெரியாமலோ  தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார். காமெடிக்கு முடுக்கு போட்டுவிட்டு ஹீரோவாக அவதாரம்எடுத்து  காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னாளில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் மட்டுமின்றி சிறிய அளவில் கூட  வெற்றி பெறாமல் தோல்வியையே தழுவியது . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு ' படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.


 
ஆதலால் தற்போது ஹீரோவாக மட்டுமின்றி காமெடியனாக நடிப்பதற்கே அவருக்கு வாய்ப்புகள் தர மறுக்கின்றனர் .
 
சந்தானம் இன்று தனது 39 -வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் . இந்த வருடமாவது அவருக்கு நிறைய படவாய்ப்புகளை அமையட்டும் வாழ்த்துக்கள் சந்தானம்..!