புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (16:14 IST)

அவனுக்கு ரொம்ப திமிரு; சினேகனை வம்புக்கிழுக்கும் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 23 நாட்களாக ஒளிப்பரபி கொண்டிருக்கிரது. இதில் தினமும் மக்களை கவர்ந்திழுக்க பல வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரே கூத்தும் கும்மாளமுமாக, ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்ளும் பிரபலங்கள். இவர்களுக்கிடையே சின்ன சண்டைகள், வாய் சண்டை போன்ற மோதல்கள் வருவதுண்டு.

 
ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு தலைவர், வார இறுதியில் ஒருவர், ஓட்டுகளை வைத்து எலிமினேஷன் செய்யப்படுகிறது. இதில் இன்றைய பிக் பாஸ் டாஸ்லில் ஒரே குடும்பமாக எல்லோரும் இருக்கவேண்டும் என்பது. இதில் கவிஞர் சினேகனை  வீட்டு வேலைக்காரனாக அனைவரும் சேர்ந்து நியமித்துள்ளனர். அவர் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்பது பிக் பாஸின் விதியாகும். எனவே அவர் சாப்பாடு செய்யும் வேலையிலிருந்து பாத்திரம் கழுவும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.
 
ஓவியா வீட்டின் விருந்தாளியாக வருகிறார். அதாவது ஜூலியின் தோழியாக வரும் ஓவியா சினேகனை பார்த்து ‘இவன்தான்  வேலைக்காரனா’ அவனுக்கு ரொம்ப திமிரு அதிகம் என கிண்டல் செய்ய, அதை தொடர்ந்து வையாபுரி கோபப்படுவது போல்  காட்டுகின்றனர்.
 
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக சண்டைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.