கொரோனா எதிரொலி… திருப்பூரில் உருவாகும் பிரைவசி திரையரங்கம்!
கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் குடும்பத்தினருடன் திரைப்படம் பார்க்கும் வகையில் பிரைவசி தியேட்டர் உருவாக்கப்பட உள்ளது.
கொரோனாவுக்கு பிறகு 8 மாதங்கள் கழித்து தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர்பார்த்தப்படி கூட்டம் வராததால் தனித் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிலைமையை சமாளிக்க திருப்பூரில் ப்ரைவசி தியேட்டரை உருவாக்கியுள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமண்யம்.
தனது சக்தி சினிமாஸில் உள்ள இருக்கைகள் குறைந்த ஒரு திரையை அவர் ப்ரைவசி தியேட்டராக மாற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி 4000 ரூபாய் பணம் கட்டினால் 25 பேர் படம் பார்க்கலாம். அதற்கு மேல் வரும் ஒவ்வொருவரும் 120 ரூபாய் பணம் கட்டவேண்டும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பாதுகாப்போடு படம் பார்க்கலாம். என அறிவித்துள்ளார்.