1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (23:07 IST)

துப்பறிவாளன் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

தயாரிப்பாளர் சங்க பணிகள், நடிகர் சங்க பணிகளுக்கு இடையே விஷால் நடித்து முடித்துள்ள 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர்.



 
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது
 
இதே நாளில் தான் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' மற்றும் சரத்குமாரின் 'சென்னையில் ஓரு நாள்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால், விஜய், பிரசன்னா, அனுஇமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ் மற்றும் சிறப்பு வேடத்தில் மிஸ்கின் நடித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.